மதுரை அருகே ஓடையை தூர்வாரும்போது மீட்கப்பட்ட வெண்கலத்தில ஆன மீனாட்சி அம்மன் சிலை.!

மதுரை அருகே ஓடையை தூர்வாரும்போது மீட்கப்பட்ட வெண்கலத்தில ஆன மீனாட்சி அம்மன் சிலை.!

Update: 2021-02-22 19:08 GMT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஓடையைத் தூர்வாரும்போது சுமார் நான்கரை கிலோ எடையிலான மீனாட்சி அம்மன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கோயில்களை பண்டைய கால மன்னர்கள் கட்டி வைத்து விட்டு சென்றனர். ஆனால் தற்போது ஊருக்கு ஒரு கோயில் இருந்தாலே அதிசயமாக உள்ளது. இருக்கின்ற கோயில்களில் சிலைகள் திருட்டு மற்றும் கொள்ளையடிப்பது வாடிக்கையாக உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் உள்ள சிலைகள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக போலியான சிலைகளை வைத்துள்ளதை பார்த்து வருகிறோம்.

சில இடங்களில் கோயில் சிலைகளை எடுத்து எங்கியாவது வீசி விட்டு செல்கின்றனர். இன்று காலை கோவை பேரூர் பகுதியில் 7 ஐம்பொன் சிலைகளை குளத்தில் வீசிவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள பிரவியம்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ ஓடையைத் தூர்வாருவதற்காக கம்பியால் ம்ண்ணை பெண்கள் தோண்டியுள்ளனர். அப்போது வெண்கலத்தினால் ஆன மீனாட்சியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையானது ஒரு அடி உயரத்தில், மார்பளவு உடைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோயில்களில் உள்ள சிலைகள் எவ்வாறு ஓடை பகுதிக்கு வரும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இல்லை யாரேனும் சிலை கடத்தி வந்து அதனை ஓடையில் மறைத்து விட்டு சென்றிருப்பாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Similar News