ஆன்லைன் முன்பதிவு இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு பழனியில் அனுமதி.!
இரவு 8 மணிக்குள் அனைவரும் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி வந்துவிட வேண்டும். கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று முதல் விதித்துள்ளது. அதன்படி பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பழனி முருகன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
இரவு 7 மணிக்கு பின்னர் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போன்று இரவு 8 மணிக்குள் அனைவரும் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி வந்துவிட வேண்டும். கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அனைவரும் கோவிலுக்கு வருவதை முற்றிலும் தவிரக்க வேண்டும். அதிலும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கோவிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவாரகள். அந்த வகையில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.