நன்கொடையில் ராமர் கோயில் கட்டப்படும்.. அறக்கட்டளை தகவல்.!
நன்கொடையில் ராமர் கோயில் கட்டப்படும்.. அறக்கட்டளை தகவல்.!
ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை வைத்துக்கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அறக்கட்டளை பொது செயலர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இதன் பொது செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதி திரட்டும் மாபெரும் பிரசார இயக்கத்தை தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விரைவில் நாடு முழுவதும் துவங்குகிறது.
இதற்காக 10, 100, 1000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் அச்சிடப்பட்டுள்ளன. நன்கொடை வசூலில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படும். முறையான அனுமதி இல்லாத காரணத்தினால் கோயில் கட்டுமான பணிகளுக்கு வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
கட்டுமான செலவுகளுக்காக மதிப்பீடு செய்யப்படவில்லை. நன்கொடை வசூலிலும் இலக்கு நிர்ணயிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.