மீண்டும் திறக்கப்பட்ட ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலயம்.. ஜன.,3 முதல் பக்தர்களுக்கு அனுமதி.!

மீண்டும் திறக்கப்பட்ட ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலயம்.. ஜன.,3 முதல் பக்தர்களுக்கு அனுமதி.!

Update: 2020-12-24 08:11 GMT

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதையொட்டி ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று (23ம் தேதி) திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற ஜனவர் 3ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜெகந்நாத்தின் தரிசனம் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்யவான்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோயில் சேவையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பூரி மாவட்ட ஆட்சியர் பல்வந்த் சிங் கூறியுள்ளார்.

கோவில் சேவையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் மூன்று நாட்களில் தெய்வங்களின் தரிசனம் அனுமதிக்கப்படும். பின்னர் புத்தாண்டையொட்டி ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கோயில் மீண்டும் மூடப்படும். பின்னர் ஜனவரி 3ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் கூறியுள்ளார்.

Similar News