உடல் நலனில் முன்னேற்றத்தை வழங்கும் முத்திரைகள்! எப்படி?
உடல் நலனில் முன்னேற்றத்தை வழங்கும் முத்திரைகள்! எப்படி?
நம் ஆன்மீக மரபில் முத்திரைகள் மிக முக்கியமானது. ஆன்மீக பயிற்சிகளை செய்கிற போது கைகளில் வைக்கிற முத்திரை பலவிதமான பலன்களை, நன்மைகளை நமக்கு வழங்கும். எவ்வாறு கையில் வைக்கக்கூடிய சிறு முத்திரை இவ்வளவு நன்மைகளை ஒருவருக்கு தர முடியும் என்பது ஆச்சர்யமே.
இதற்கு காரணம் ஐம் பூதங்களே ஆகும். காற்று நெருப்பு, ஆகாயம், நீர், நிலம் இந்த ஐந்து தன்மைகளையும் குறிப்பதாகவே ஐந்து விரல்கள் உள்ளன. இந்த உடலும் ஐம்பூதங்களாலே ஆனது என்பதால், ஐம்பூதங்களில் ஒன்றின் சமநிலை குன்றினாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். எனவே ஒரு சில உடலின் இடர்களுக்கு முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும்.
உதாரணமாக, ஐந்து விரல்களும் ஒவ்வொரு பூதங்களின் குறியீடாக இருப்பதால் அந்த விரல்கலை கட்டைவிரலுடன் இணைத்து முத்திரையை உருவாக்கும் போது, அந்த குறிப்பிட்ட அம்சத்தின் குறைபாட்டால் எழுந்த நோயானது குணமாகும் வாய்ப்பு அதிகமாகிறது. எனில் எந்த விரல் ஏந்த அம்சத்தை குறிக்கிறது என்கிற கேள்வி எழும்.
நம் கட்டை விரல் உடலில் உள்ள நெருப்பு அம்சத்தின் குறையீடு ஆகும். காற்று எனும் அம்சத்தின் குறியீடாக இருப்பது சுட்டு விரல், ஆகயாத்தின் குறியீடாக இருப்பது நடுவிரல், பூமியின் அடையாளமஆ இருப்பது மோதிர விரல், மற்றும் நீரை குறிப்பது சுட்டு விரல். முத்திரைகளில் நூற்றுக்கணக்கான முத்திரைகள் நம் மரபில் உண்டு. சிலவை ஆரோக்கியத்திற்காக, சிலவை அம் நல்வாழ்விற்காக, மற்றும் சில முத்திரைகள் ஆன்மீகத்தின் உயர்நிலையை அடைய பய்யன்படுத்துவது வழக்கம்.
ஞான் முத்ரா என்பார்கள் இது பல யோகிகளின், அவதாரங்களின் தியானநிலை முத்திரையாக இருந்துள்ளது. சூன்யா முத்ரா என்பது, உடலை தளர்வாக வைக்க உதவும், ஹஸ்த முத்ரா என்பது, காது கேளாமை வாந்தி, தைராய்ட் பிரச்சனை போன்றவற்றை குறைக்க உதவும். அடுத்த முக்கியமான முத்திரை அபான் முத்திரை. இது உடலை சுத்திகரிக்க உதவுகிறது. உடலில் இருக்கும் தீயவை வெளியேற உதவிகரமாக இருக்கும்.
பிராண் முத்ரா என்பது நம் உயிர்ப்பு தன்மையை மேம்படுத்துவதாக அமைகிறது. வாயுமுத்ரா என்பது அழுத்தத்தை போக்க என முத்திரைகளின் வரிசை நீண்டு கொண்டேயிருக்கும். இந்த முத்திரைகளை முறையான ஆசிரியர் அல்லது குருமார்கள் மூலம் கற்று பயிற்சித்து வந்தால் நல்ல மாற்றங்களை அடையலாம்.