சோழர்களின் திறமை.. பள்ளத்தில் இருந்து மேட்டிற்கு செல்லும் மழைநீர் கால்வாய்.. சிதம்பரம் நடராஜர் கோயிலின் பெருமை.!

சோழர்களின் திறமை.. பள்ளத்தில் இருந்து மேட்டிற்கு செல்லும் மழைநீர் கால்வாய்.. சிதம்பரம் நடராஜர் கோயிலின் பெருமை.!

Update: 2020-12-10 18:56 GMT

நீர் மேலாண்மை திட்டத்தில் மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி கால்வாய் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளத்தில் இருந்து மேட்டுப்பகுதிக்கு செல்லும் சுரங்க கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோயில் உட்புறங்களிலும் தண்ணீர் புகுந்தது. அப்போது கோயில் முழுவதும் குளம் போன்று காட்சியளித்தது. ஆனால் இந்த மழை நீர் செல்வதற்கும் சோழர்கள் அழகாக பாதையை அமைத்துவிட்டுதான் சென்றுள்ளனர். இதனை அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை என்றே தெரிகிறது.

நடராஜர் கோயிலில் இருந்து உபரிநீர் வெளியேற கோவிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து வடக்கே அமைந்துள்ள தில்லைக்காளி கோவில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் பூமிக்கு அடியில் சுரங்க நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் அமைக்கப்படவில்லை.
கால்வாய் ஒரு இடத்தில் அகலமாகவும் பின் குறுகலாகவும் என மாறி மாறி வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற இந்த அமைப்பை பயன்படுத்தியுள்ளனர். 

பராந்தக சோழன் கீழணையில் இருந்து மேடான பகுதியான வீராணம் ஏரிக்கு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வடவாறு வழியாக வாய்க்கால் அமைத்துள்ளனர். பாம்பு போல் வாய்க்கால் இருந்தால் தண்ணீர் பனையும் ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும்.

நீரை எளிதாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தவும் சேமிக்கவும் சிறந்த நீர் மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இந்த கால்வாய் ஒன்றே போதும்.
 

Similar News