சூழ்ச்சியை வதைக்கும் சூரசம்ஹார விழா இனிதே நடக்கிறது திருச்செந்தூரில் !

சூழ்ச்சியை வதைக்கும் சூரசம்ஹார விழா இனிதே நடக்கிறது திருச்செந்தூரில் !

Update: 2020-11-20 14:16 GMT

முருகனின் முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா. திருச்செந்தூர் கடற்கரையில்  நிகழும் இவ்விழாவை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெறவிருக்கும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவுருத்தப்பட்டுள்ளது.

சூரபத்மன் என்கிற அசுரனின் தீய செயல்கள் அதிகரித்து வந்த சூழலில், அவனை அளிக்க சிவபெருமானின் மகவால் தான் முடியும் என்பதால் சிவபெருமானின் நெற்றிகண் கனலில் உருவானவர் முருக பெருமான்.

முருக பெருமான் தேவர்களின் படைக்கு தலைமேயேற்று போரி புரிந்த போது, சூரபத்மன் என்கிற அசுரன் மட்டுமல்லாமல், அவனுடைய சகோதரர்கள் ஆன தாரகாசுரன், சிம்ஹமுகா ஆகியோரையும் அழித்தார் முருகர்.

இந்த வதத்தின்  போது சக்தி தேவி, தன்னுடைய சக்தி முழுமையும் திரட்டி வேலை ஆயுதமாக முருகப்பெருமானிடம் கொடுத்ததால் வேலாயுதம் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. அந்த வேலை கொண்டே அசுரனை வதைத்தால் வேல் முருகன் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

கார்த்திகை மாதத்தின்  ஆறாம் நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டிவிரதத்தின் போது பக்தர்கள் ஆறு நாட்கள் விரதம் இருந்து ஆறாம் நாளான சூரசம்ஹாரம் அன்று விரதத்தை முடிப்பர். சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் திருக்கல்யாணம் நிகழ்வது வழக்கம்.

இந்த முறை பக்தர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதும், தொலைகாட்சி, சமூக ஊடகங்களில் இதன் நேரடி ஒளிப்பரப்பு நிகழ்கிறது.

கடற்கரை முழுவதும் எழும் அரோகரா கோஷம் விண்ணை பிளக்கும் இந்த சூரசம்ஹார திருநாளில் முருகனை எண்ணி துதிப்போம். வினைகளிலிருந்து விடுதலை பெறுவோம்.

Similar News