தீராத நோய்களை தீர்க்கும் அதிசயம்! குக்கே சுப்ரமணியர் திருக்கோவிலின் ஆச்சர்ய தகவல்கள்.!
தீராத நோய்களை தீர்க்கும் அதிசயம்! குக்கே சுப்ரமணியர் திருக்கோவிலின் ஆச்சர்ய தகவல்கள்.!
முருக பெருமானின் புகழ் பெற்ற கோவில்கள் என்றால் அறுபடை வீடு தான். அதற்கடுத்து தென்னிந்தியாவில் கர்நாடாகவில் பல புகழ்பெற்ற முருகர் கோவில்கள் உண்டு. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது. குக்கே சுப்ரமணியர் ஆலயம். முருகரை கர்நாடாகவில் சுப்ரமணியா என அழைப்பது வழக்கம்.
பசுமையான சூழலில், மிகவும் எழிலான குமர பர்வதம் எனும் மலையின் மடியில் இந்த கோவில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. ஏராளமான பக்தர்கள் இங்கே முருகனை தரிசிக்க குவிகின்றனர். கோவிலுக்கு பின் பாய்ந்தோடும் குமரதாரா நதி இந்த கோவிலின் அழகை மென்மேலும் கூட்டுவதாய் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டு பழமையானது. இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் சுப்ரமணியரின் அம்சம் நிறைந்திருப்பதாக ஞானியர் சொல்கின்றனர். இந்து மரபில் முக்கிய கோவிலாக குக்கே சுப்ரமணியர் கோவில் இருந்துள்ளது.
சிவ பெருமானின் புத்திரரான சுப்ரமணியர், ஏராளமான தீய சக்திகளை, அரக்க அசுரர்களை அழித்து ஆக்ரோஷத்தை தணிக்க தேர்ந்தெடுத்த மலை தான் குமர பர்வதம். சுப்ரமணியர் குமார பர்வ தத்தை அடைந்த போது அவருடைய ஆற்றல் பொங்கி பிராவகமெடுத்திருந்தது. அப்பிரவாகத்தில் அங்கிருக்கும் கற்களெல்லாம் குமரனாகவே ஜொலித்தது. இன்றும் கூட அங்கே கிடைக்க கூடிய சில கற்களில் ஆறு முகம் கொண்டிருப்பதை காண முடியும்.
இங்கே தங்கி தியானித்த முருக பெருமானுக்கு தன்னுடைய மகள் தேவசேனையை இந்திர தேவன் மணமுடித்து கொடுத்தான் என்பது வரலாறு. இந்த திருமணத்திற்கு தேவாதி தேவர்களும் மும்மூர்த்திகளும் வந்திருந்து வாழ்த்தியதாக புராணங்கள் சொல்கின்றன.
இக்கோவில் குறித்து சொல்லபடும் மற்றொரு குறிப்பு, இங்கே நாகத்தின் தலைவரான வாசுகி, கருடனின் அபாயத்திலிருந்து தப்ப இந்த மலையில் தியானம் செய்து கொண்டிருந்ததாகவும். அதன் படியே, சுப்ரமணியர் வாசுகி அடைக்கலம் அளித்து பாதுகாப்பு கொடுத்தா. அதனால் இங்கே வாசுகிக்கும் கோவிலுண்டு. பரசுராமர் நிர்மாணித்த ஏழு புனித ஸ்தலங்களுள் இந்த ஸ்தலமும் ஒன்று. இதனை குப்த ஷேத்ரம் என அழைக்கின்றனர்.
இங்கே புற்று மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்திற்கு ம்ருத்திக்க பிரசாத என்று பெயர். தீராத நோய்களை தீர்க்கும் வல்லமை இதற்கு இருக்கிறது என்பது நம்பிக்கை.