கையில் பிரதிஷ்ட்டை செய்த கயிறுகளை கட்டுவதால் ஏற்படும் அதிசய நன்மைகள்!

கையில் பிரதிஷ்ட்டை செய்த கயிறுகளை கட்டுவதால் ஏற்படும் அதிசய நன்மைகள்!

Update: 2021-02-13 07:06 GMT

இந்திய நாட்டில் பல விதமான பழக்க வழக்கங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன. இந்து மரபில் நம் ஒவ்வொரு பழக்கத்திற்கும் அறிவியல் பூர்வமான காரண காரியங்கள் உள்ளன.

அதன் படி நாம் இந்திய நாட்டில் பல மக்கள் கைகளில், கழுத்துகளில் புனித கயிறுகளை அணிந்திருப்பதை நாம் காண முடியும். அது பல வண்ணங்களிலான கயிறுகள். சிவப்பு, மஞ்சள், காவி, கருப்பு, வெள்ளை என பல நிறங்களில் மக்கள் அணிந்திருப்பதை நாம் காண முடியும்.

ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. எந்த இடத்தில் அணிகிறோம் என்பதை பொருத்தும் அதன் பலன்கள் மாறுபடும். அதன் விளக்கம் இங்கே.

சிவப்பு கயிறு.

சிவப்பு கயிறு என்பது பெரும்பாலும் கைகளிலும், ஆண்களும், பெண்களும் குறிப்பாக குழந்தைகளும் அணிந்திருப்பதை நாம் காண முடியும். இது எவற்றை குறிக்கிறது எனில், நீண்ட ஆயுளை குறிக்கிறது. எதிரிகளிடமிருந்து நாம் நம்மை காத்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. இதனை ரக்‌ஷை என்றும் அழைக்கின்றனர்.. முறையே கடவுளின் அருளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இது அணிகிற போது இது சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

கறுப்பு கயிறு.

கறுப்பு வண்ணம் கண் திருஷ்டியை குறிக்கிறது. குறிப்பாக குழந்தைகளில் கால்களில், கைகளில் அல்லது இடுப்பில் இவற்றை காண முடியும். குழந்தைகள் எளிதில் கண் திருஷ்டிக்கு ஆட்பட்டு விடுவார்கள். எனவே இதனை அணிவது வழக்கம். அதுமட்டுமின்றி சனிபகவானின் அருளை பெற வேண்டி பெரியவர்கள் கூட இந்த கயிற்றை அணிவது உண்டு.

காவி கயிறு

காவி நிறம் புகழ், பணம் செளபாக்கியத்தை குறிக்கிறது. இது ஒரு மனிதருக்கு நிகழும் நல்ல வாய்ப்புகளை அவர்களிடம் முறையே கொண்டு வந்து சேர்க்கும், அந்த நல்வாய்ப்புகளுக்கான தடைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை நீக்கும் வல்லமை இந்த கயிறுக்கு உண்டு.

மஞ்சள்

இது இந்தியர்களின் பாரம்பரியத்துள் ஒன்று, திருமணமாகத பெண்கள் சுமங்கலி பூஜை, அல்லது மங்களகரமான பூஜைகள் நிகழ்ந்த பின் மஞ்சள் கயிற்றை கைகளை கட்டுவார்கள். திருமணமான பெண்கள் மஞ்சள் கயிற்றை மாங்கல்யமாக அணிவது வழக்கம்.

இவ்வாறாக ஒவ்வொரு வழக்கமும், ஒவ்வொரு தனித்துவத்துடன், சிறப்பம்சத்துடனே உருவாக்கப்பட்டுள்ளது

Similar News