விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிமக திருவிழா.!

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிமக திருவிழா.!

Update: 2021-02-17 13:52 GMT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் உடனுறை விருதாம்பிகை பாலாம்பிகை சன்னதியில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள 5 கொடி மரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவனடியார்கள், தேவாரம் திருவாசகம் பாடி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் படித்து, மங்கள இசை முழங்க மாசி மகத்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டது.

கொடியேற்றத்திற்கு முன்னதாக விருத்தகிரீஸ்வரர் உடனுறை விருதாம்பிகை பாலாம்பிகை, விநாயகர், முருகர் உள்ளிட்ட பரிவார கடவுள்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

Similar News