திருவண்ணாமலை கோயிலில் புண்ணியகாலம் பிரம்மோற்சவ கொடியேற்று விழா.!

திருவண்ணாமலை கோயிலில் புண்ணியகாலம் பிரம்மோற்சவ கொடியேற்று விழா.!

Update: 2021-01-05 10:41 GMT

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் உத்திராயண புண்ணியகாலம் பிரம்மோற்சவ கொடியேற்று விழா இன்று காலை நடந்தது.

இதனையொட்டி, விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், கொரோனா தொற்று காரணமாக அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்த பின்னரே கோயிலில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News