விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமக தேர் திருவிழா.. தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பு.!

விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமக தேர் திருவிழா.. தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பு.!

Update: 2021-02-25 12:48 GMT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9ம் நாள் திருவிழாவாக மாசிமக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

விநாயகர், முருகர் வள்ளி தெய்வானை, விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், சண்டீகேஸ்வரர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

Similar News