ரோட்டில் கண்டெயினர் போனாலே கதறும் தி.மு.க-வினர் - அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது சரியா போச்சு!

Update: 2021-04-21 01:00 GMT

விருத்தாசலத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகில் கன்டெய்னர் லாரி நின்றது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அது தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெயினர் என்பது தெரிய வந்துள்ளது.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. 




 


இந்த நிலையில், கன்டெய்னர் லாரி, வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் வந்து நின்றது. ஆனால் அந்த லாரி இரவு 8 மணியை கடந்தபோதிலும் அதே இடத்தில் நின்றது. இதனால் கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

விசாரணையில், திருப்பூரில் இருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றி வந்ததும், லாரி டிரைவர் விருத்தாசலத்தை சேர்ந்தவர் என்பதால் வாக்கு எண்ணும் மையம் அருகில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி் விட்டு, அதன் டிரைவர் தனது வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது.

இதே போல தமிழகத்தில் பல பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அருகில் கண்டெயினர் லாரி சென்றாலே, திமுகவினர் பதறியடித்து விசாரிப்பது தொடர்கதையாகி வருகிறது.  

Similar News