எந்த மருத்துவமனையில், எத்தனை படுக்கை காலியா இருக்கு? சிரமமே வேண்டாம்! இனி வீட்டில் இருந்தே அறிந்துகொள்ளும் வழி!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆக்சிஜன் தேவையை தமிழகம் சரியாக கையாளுகிறதா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.
கடந்த 25 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமயத்தில், இச்சூழலை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கை விவரங்களை எளிதாக அறிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்கிற வலைதளத்தின் மூலம் ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறியது கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தளத்திற்குள் சென்று, எந்த மாவட்டத்தில் காலி படுக்கை இடம் அறிந்துகொள்ள வேண்டுமோ, அதனை தேர்வு செய்தால், அனைத்து படுக்கை வசதிகளும் காட்டப்படும். மருத்துவமனைகள் மட்டுமின்றி, கல்லூரிகள், பள்ளிகள், திருமண மண்டபங்களில் உள்ள படுக்கை விவரமும் இதில் இடம்பெற்றுள்ளது.