தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் உச்சம் - திரிபுராவை விட மோசமான நிலையில் தமிழகம்!

Update: 2021-05-15 00:45 GMT

தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் தமிழகத்தில் உச்சம் அடைவதாக நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது பற்றிய புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.




 


100 பேரில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்? என்ற பட்டியல்: 

1) டெல்லி = 22 (100க்கு 22)

2) குஜராத் = 22

3) ராஜஸ்தான் = 18

4) கர்நாடகா = 16

5) பஞ்சாப் = 13

6) மத்தியப் பிரதேசம் = 10

7) தமிழ்நாடு = 8

8) பீகார் = 6.

ஏன் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு குறைந்த விகிதத்தில் தடுப்பூசி போடப்படுகிறது? அதாவது 100 பேரில் 8 பேர் மட்டுமே போட்டுள்ளனர்.

காரணம், இங்குதான் தடுப்பூசி எதிர்ப்புப்பிரச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. போலி இடதுசாரிகள், போலி மார்க்சிஸ்டுகள், போலி நக்சல்பாரிகள் என பலதரப்பட்ட போலி முற்போக்கு ஆட்களும் தமிழ்நாட்டில் தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

கடந்த எடப்பாடியார் அரசிலும். இப்போதைய ஸ்டாலின் அரசிலும் தடுப்பூசியை எதிர்க்கும் பிற்போக்குத்தனமான ஆட்கள் சர்வ சுதந்திரமாக சமூகத்தைக் கெடுத்து வருகின்றனர்.

Similar News