நெதர்லாந்தில் இருந்து ஆக்சிஜன் வருகை: கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று நோயின் காரணமாக பல தரப்பிலிருந்து உதவி வருகின்றன. மேலும் மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
அடுத்ததாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்தை மாநில அரசே கொள்முதல் செய்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது என்பது அறிந்த ஒரு விஷயம்.
எனவே மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆகவே தற்பொழுது தடுப்பூசிகள் மட்டுமல்லாது ஆக்சிஜன் சிலிண்டர் தேவைகளையும் மாநில அரசு திருத்தம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் வந்தடைந்தது. தற்சமயம் தமிழ்நாட்டிலும் இவ்வாறு மருந்துகளை கொள்முதல் செய்து இலவசமாக ஊசி போடப்பட இருக்கிறது.
இதே போல் தமிழ் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்தது. இதைத் தொடர்ந்து நெதர்லாந்து நாடு ஆக்சிஜனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலமாக ஆக்சிஜன் சென்னை வந்தடைந்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் சிங்கப்பூரில் இருந்து 500 சிலிண்டர் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.