அந்தர் பல்டி! டுவிட்டர் கதவை இழுத்து சாத்திக்கொண்டு ஈஷா யோகா குறித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்!
ஜக்கி வாசுதேவ் விவகாரத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீரென மாற்றி மாற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ''ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல.
அது எனது நோக்கமும் அல்ல. மேலும், ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்களோ, நிகழ்வுகளோ எழும் வகையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை. இனி எந்தவொரு நிகழ்விலும், இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை.
நான் 10 ஆண்டுகள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். உலகின் 50 மிக முக்கிய சர்வதேச வங்கிகளில் ஒன்றாக இருக்கும் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்வதேச தலைமைப் பொறுப்பையும் ஏற்று பணிபுரிந்திருக்கிறேன்.
இத்தனை பணிகளிலும் என் வாழ்நாளில் நான் ஏற்ற பொறுப்புகளில் மிக முக்கியமான பொறுப்பு தமிழக அரசின் அமைச்சர் எனும் பெரும் பொறுப்பு . முதல்வர் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் பெயரில் இந்த பொறுப்பினை எனக்கு வழங்கியிருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்ற நான் பாடுபடுவேன்.
முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டு ஒரு நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி என் முழு கவனத்தையும் அதில் செலுத்தி வருகிறேன். இதையடுத்து மாநில நிதி நிலைமையை மேம்படுத்துவது மற்றும் அரசாங்கத்தின் மனிதவள நிர்வாகத்தை ஆராய்ந்து அதை சீர் செய்வதுதான் எனது நீண்டகால பணியில் முழுமையாக இருக்கிறது.
I request the kind indulgence of my friends in the media to allow me to focus on efforts related to COVID19. I have a backlog of requests I simply cannot process. My team will post videos of concluded interviews and issue statements as necessary based on developments (as below) pic.twitter.com/035nztnic3
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 19, 2021