தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாநிலங்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழகம்!

Update: 2021-06-11 12:46 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை மக்களுடைய பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது. இதனால், தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது. மேலும் தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் முயற்சிகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் தடுப்பூசி குறைந்த அளவே செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பிடித்துள்ளது.


கொரோனா தடுப்பூசி மிகக் குறைவாக செலுத்திய மாநிலங்களின் பட்டியல்களை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் இடம்பிடித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழகத்தில் இதுவரை, 9% பேருக்கே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் 22.5 % பேருக்கும், குஜராத்தில் 20.5% பேருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.


அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்த மருத்துவ கட்டமைப்பைக் கொண்ட தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி குறைந்த அளவிலான மக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதற்கு காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாததே என்றும் கூறப்படுகிறது. எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை மாநில அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜனவரி, பிப்ரவரியில் யில் 4.57 லட்சம் பேரும், மார்ச்சில் 28 லட்சம் பேரும், மே மாதத்தில் 30 லட்சம் பேரும் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News