கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சி! சீர்மிகு நகர திட்டத்தை செயல்படுத்தியதில் இந்தியாவிலேயே தமிழகம் அபாரம்!

Update: 2021-06-26 07:17 GMT

மத்திய அரசின் சீர்மிகு நகரங்களுக்கான விருதுகள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. தற்போது 2020-ஆம் ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் சீர்மிகு நகரம் திட்டம் தொடங்கப்பட்டு 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசும் தங்கள் மாநிலத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும், காற்று மாசு ஏற்படுவதை தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சீர்மிகு நகரங்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி வருகிறது.

அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் கொரோனா நோய் பரவல் ஏற்பட்டு வருவதால், கூடுதலாக 2 பிரிவுகள் சேர்க்கப்பட்டு 2020-ஆம் ஆண்டிற்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் காற்று மாசு ஏற்படுவதை குறைதல், புதைவட கம்பித்தடம் மூலம் மின் விநியோகம் வழங்கியது மற்றும் கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சிகளை செயல்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் சென்னை மாநகராட்சிக்கு முதலிடம் கிடைத்து உள்ளது.

மேலும் ஈரோடு மாவட்டம் சுற்றுச்சூழல் கட்டமைத்தல் பிரிவில் மூன்றாவது இடமும், சிறந்த நகரம் பிரிவின் 4-வது சுற்றில் முதல் இடமும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சீர்மிகு நகரம் திட்ட செயல்படுத்துதலில் தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம் கிடைத்து உள்ளது.

Similar News