இந்தியாவில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது குறிப்பாக இந்த நோய்த் தொற்று காலத்தில் இரவு, பகலாக ஓய்வு எடுக்காத மற்றும் அயராது ஓடிக்கொண்டிருக்கும் மருத்துவர்களை எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு நாள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிசி ராய் அவர்களின் பிறந்த நாளை, தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா காலத்தில் மருத்துவர்களின் தியாக உணர்வுடன் கூடிய சேவையை கவுரவிக்கும் விதமாக, மருத்துவர் தினம் கொண்டாடப் படுகிறது.
எனவே தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச்செய்து அனைத்து மருத்துவர்களை கவுரவப் படுத்தியுள்ளது. மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டும், விருது வழங்கியும் அவர்களை பெருமைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் ஓய்வின்றி மக்களின் உயிரை காக்க போராடி வரும் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.
ஆரஞ்சு நிறம் ஒருவரின் தியாக உணர்வைக் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே மருத்துவர்களின் சேவையை பாராட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்கும் இந்த கோட்டையை அவ்வழியாக என்று மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.