கோவையில் ஒரு கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு - அறநிலைத்துறை அதிரடி!

Update: 2021-07-07 11:56 GMT

கோவை சுக்கிரவார்பேட்டையில், பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, அதில் உணவகம் நடத்தி வந்தார். இது தொடர்பாக வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.


நீதிமன்றத்தில்  நடந்த வழக்கின் அடிப்படையில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழு முன்னிலையில், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.


இது குறித்து ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில் ''பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. 990 சதுர அடி கொண்ட இந்த இடத்தின் இன்றைய விலை ஒரு கோடி ரூபாய். மேலும் கோவை மண்டலத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. படிப்படியாக ஒவ்வொன்றும் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.'' என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News