அதிகார ஆணவமா? வெடிக்கும் சர்ச்சை.. உதயநிதியின் ஹிந்து விரோத செயல்!

Update: 2021-07-10 15:04 GMT

பெரம்பூர் தொகுதியில் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் பழைய வியாசர்பாடியில் ஏற்கனவே இருந்த குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. சென்னையில் நடந்த இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், காலில் செருப்பு அணிந்து  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மலர் தூவினார். உதயநிதியின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர். 


உதயநிதியின் இந்த செயலை கண்டித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் "சென்னையில் உள்ள வியாசர்பாடி மாற்று எம்.ஜி.ஆர். நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன் 'நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்' என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

கருணாநிதி சமாதிக்கு போகும் போது செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் தி.மு.க அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.

மேலும் உதயநிதியின் செயல் குறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறுகையில்  "தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்." என்று காட்டமாக கூறினார்.

Tags:    

Similar News