இரண்டு குழந்தைக்கு தந்தையாகியும், எதிர்வீட்டு பெண்ணை கர்ப்பமாக்கி, பின் கொன்ற தி.மு.க ஊராட்சி தலைவரின் மகன் - கொடூரம்!

Update: 2021-07-14 02:56 GMT

தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் மகன், எதிர்வீட்டு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்துக் கொள்ளச் சொன்னவுடன் கருக்கலைப்பு செய்ய முயற்சித்ததால், அப்பெண் வீட்டிலேயே பரிதாபமாக பலியானார்.

கடலூர் மாவட்டம், கொத்தட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவரர் பதவி வகித்து வருகிறார். இவரின் மகன் வசந்த குமார் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையிலும், எதிர் வீட்டு பெண்ணுடன் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பழக்கம் எல்லை மீறி சென்றநிலையில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். திருமணம் செய்துக் கொள்ளுமாறு அந்த பெண் கேட்டவுடன், அப்பா கட்சியில பெரிய ஆளா இருக்காங்க. அவங்களுக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும். கருவை முதலில் கலைத்து விடுவோம் என்று சொல்லி முறைகேடாக சில ஆட்களை ஆணுகியுள்ளார் வசந்த குமார்.

₹20,000 தருவதாக பேரம் பேசி, வீட்டில் வைத்து அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். சிறிது நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமாகி உடல்நிலை மோசமானது.

அப்பெண்ணின் இறப்புக்குக் காரணமான வசந்த குமார் உட்பட இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர்களின் புகார்படி போலீஸார் விசாரித்து இதில் சம்பந்தப்பட்ட எட்டு பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். நீதிபதி சுப்ரமணியன் வழக்கை விசாரித்து கைதான எட்டு பேரையும் 15 நாள்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

Similar News