தமிழ்நாடு: கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அகழ் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Update: 2021-07-14 13:15 GMT

தமிழ்நாட்டில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை கண்டு பிடிப்பதற்காக பல ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இத்தகைய சான்றுகள் மூலம் முன்பு வாழ்ந்த மனிதனின் நாகரிகம் எப்படி? எவ்வாறு? தோன்றியது மற்றும் அவருடைய வளர்ச்சி எவ்வாறு இருந்தது? என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது மயிலாடும்பாறை அருகே பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், பாறை ஓவியங்கள், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சான்றுகள் கொண்ட மாவட்டத்தில் கிருஷ்ணகிரியும் ஒன்றாக இருந்து வருகிறது.


அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மயிலாடும்பாறையின் அடிவாரத்தில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது இருந்தது. அந்த அடிப்படையில் தொல்லியல் பொறுப்பாளர் சக்திவேல் தலைமையிலான தொல்லியல் துறையினர் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மயிலாடும்பாறை அடிவாரத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான வாள் ஒன்றை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் அவர்கள் தங்களுடைய போர்களுக்கு கால்களைப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை நன்றாக அறிய முடிகிறது. மேலும், ஆயுதங்கள் கூர் தீட்டும் பகுதி இருப்பதும், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Similar News