நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு!

Update: 2021-07-21 02:36 GMT

தி.மு.க அரசு சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யும் கோரிக்கை மனுவை அமைச்சர் சுப்ரமணியன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வழங்கினார். அப்போது மத்திய கல்வி அமைச்சர் நீட் தேர்வில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார், மேலும் தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.


இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 'ntaneet.nic.in' என்ற இணையதளத்தில் பதிவு  செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை இந்த இணையத்தில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.


இதனால் நீட் எழுத விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். மேலும்  நீட் தேர்வு எழுதும் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

Similar News