கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் கைது, இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம்!

Update: 2021-07-24 02:55 GMT

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்ணன் குளம் பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். மிகவும் பழமையான கோயில்கள் பலவற்றை மாநகராட்சி இடித்து வருவதை பலர் கண்டித்து வந்தனர்.


இந்த நிலையில், முத்துமாரியம்மன் கோயிலை இடித்து தரைமட்டமாகிய தமிழக அரசு மற்றும் கோவை மாநகராட்சியை  கண்டித்து ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் தலைமையில் பலர் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மேலும் இடிக்கப்பட்ட அந்த கோயிலை அதே இடத்தில அமைக்க வலியுறுத்தி அங்கு இருந்த மக்கள் போராட்டம் நடத்தினர். ஹிந்து கோயில்களை இடிப்பதை கண்டித்து பலர் ஆர்ப்பாட்டம் செய்த போது  அங்கு வந்த காவல் துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.


இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் காவல் துறையின் கைது குறித்து ஹிந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவை முத்தன்ன குளம் ஓரத்தில் இருந்த மிகவும் பழமையான அங்காளம்மன் கோவிலை இடித்த தமிழக அரசையும் கோவை மாநகராட்சியை கண்டித்து இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் தலைவர் தமிழ்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் தலமையில் ஆர்ப்பாட்டம் செய்த போது கோவை மாநகர காவல்துறை கைது செய்தது. காவல் துரையின் இந்த கைது நடவடிக்கையை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்." என்று அதில் பதிவிட்டு இருந்தது.

Tags:    

Similar News