கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு !

Update: 2021-10-08 00:00 GMT

இந்து சமய அறநிலைத்துறை கோவில் நகைகளை ஊருக்க திட்டமிட்டுள்ளதாக செப்டம்பர் 22-ஆம் தேதி அறிவித்தது, அதனை எதிர்த்து பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். இந்து சமய அறநிலைத்துறை வரம்புமீறி செயல்படுவதாகவும், கோயில் நகைகளை உருக்கும் நடவடிக்கையின் பொழுது பல முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளதாகவும்  அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு "நகைகளை உருக்கும் போது எந்தவித முறைகேடுகளும் நடக்காது இது கடவுள் மீது ஆணை" என்று சத்தியம் கூட செய்திருந்தார் ஆனாலும் இதனை ஏற்க முடியாத நிலையில் பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும்  அறநிலையத்துறைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், அறநிலைத்துறை கோயில் நிர்வாகத்திடம் மட்டும் தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவரங்களில் தலையிட முடியாது என்றும் மனுதாரர்  கூறியுள்ளார்.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்குவது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால்  தொடரப்பட்ட இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றம் இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இப்பொழுது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Polimer

Image : Tamil Nadu Tourism.

Similar News