தொடர் மின் வெட்டு., விடியல் ஆட்சியால் வீதிக்கு வந்த கிராமம் !
புதுகோட்டை அருகே தொடர்மின் வெட்டை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தொடர் மின்தடையை எதிர்த்து மக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்ட போது ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பாத்தம்பட்டி பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிபட்டு வந்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் மிந்தடையை கண்டித்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை அறிந்து அந்த பகுதிக்கு வந்த பாத்தம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் சோழன் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது போராட்டகாரர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கார்த்திக் ராஜ் என்பவர் ஊராட்சிமன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் போர்களம் போல காட்சி அளித்தது.