பொதுமக்கள் அஞ்சலி செலுத்த : ராணுவ அதிகாரிகளின் உடல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது !

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்ற இடத்தில் நேற்று (டிசம்பர் 8) ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயர் அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர். அனைவரின் உடல்கள் நீலகிரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-09 05:32 GMT

இதனிடையே உயிரிழந்த அனைத்து ராணுவ அதிகாரிகளின் உடல்கள் சாலை மார்க்கமாக கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர்களின் உடல்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தேச பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர்களும் காலை 10 மணியளவில் தங்களின் அஞ்சலியை செலுத்துகின்றனர். ராணுவத்தினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர் சாலை மார்க்கமாக 13 பேரின் உடல்களும் கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே பாவியார் சாலை முழுவதும் வாகன போக்குவரத்திற்கு முழுமையாக தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: The Economics Times

Tags:    

Similar News