தமிழகத்தில் தேச துரோகிகளை வேட்டையாடும் நேரம் வந்து விட்டது: மேஜர் மதன் குமார் ஆவேசம்!

இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என்று 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர்.

Update: 2021-12-09 05:45 GMT

இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என்று 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர். அவர்களின் இழப்பு ஒட்டு மொத்த நாட்டிற்கே பேரிழப்பாகும். நமது நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக உறங்க ராணுவ வீரர்களே காரணம். ஒட்டுமொத்த ராணுவ வீரர்களுக்கும் தலைமை பொறுப்பாக பிபின் ராவத் இருந்தார். அவரது மறைவுக்கு ஒவ்வொரு குடிமகனும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சமூக வலைதளங்களில் முப்படையின் தலைமை தளபதியின் மரணம் பற்றி தவறான தகவல்களை தமிழகத்தில் உள்ள தேச விரோத சக்திகள் பரப்பி வருகின்றனர். அது போன்றவர்களை கண்டறியும் தருணம் வந்து விட்டதாக மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு யூடியூப் சேனலில் பேசும்போது, தேசத்தில் வாழத் தகுதியில்லாதவர்கள், தேசத்தை துண்டாடக் கூடிய சக்திகளுக்கு துணைபோகக் கூடியவர்கள் இவர்களை கண்டு களைந்தெடுக்க வேண்டிய கட்டாயத் தருணம் இப்போது வந்துவிட்டது.

ஒரு நாட்டோட ராணுவத் தளபதி என்பவர் ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பார்பட்டவர் ஆவார். நாட்டின் பாதுகாப்பை தனது தோளில் சுமந்து கொண்டிருப்பவர். அவருக்கு அந்த பொறுப்பு கிடைப்பது என்றால் அவர் அதற்காக எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருப்பார் என்றும், எந்த அளவிற்கு திறமையானவர் இருந்திருப்பார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இதனை தவறாக சமூக வலைதளங்களில் தேவையில்லாத கமெண்ட்களை செய்து வருகின்றனர். அதிலும் வெளிநாட்டு ஊடகங்களான பாகிஸ்தானில் இருப்பவர்கள் நிறைய பேர் செய்கிறார்கள். இதனை தமிழ் போராளிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஒன்று சேர்ந்து தாக்கிவிட்டனர் என்பது கூட சில செய்திகளில் வருகிறது. ஆனால் இந்த தருணத்தில் இப்படி கமெண்ட் செய்தவர்கள் குறிப்பா வெரிப்பைட் ஹேண்டல்ஸ் சொல்லக்கூடிய சமூகத்தில் மற்றும் ஊடகத்தில் இருப்பவர்கள் கூட கமெண்ட் செய்துள்ளனர். அது போன்றவர்கள் மீது கடுமையான சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ளது.இந்த பிரச்சினைகள் முடியும்போது 99 சதவீத மக்கள் சோகத்தில் இருக்கும்போது, 1 சதவீத புள்ளுருவிகளை வேட்டையாடும் தருணம் வந்துள்ளது. இது என்னுடைய கருத்தும் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News