திருவண்ணாமலையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு மோட்ச தீபம்!

திருவண்ணாமலையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய ராணுவத்தின் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்துள்ளனர்.

Update: 2021-12-10 05:58 GMT

திருவண்ணாமலையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய ராணுவத்தின் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வனப்பகுதியில் கடந்த 8ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த நமது இந்திய நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் நாட்டின் முப்படைத் தலைமை தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திருவண்ணாமலையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், அருணாசலேஸ்வரர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிப்பட்டனர். இதன் பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலியை செலுத்தினர். இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு தங்கள் நாட்டு தலைமை தளபதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News