தருமபுரி அருகே அரசு, வேம்பு மரம் திருக்கல்யாண விழா!

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி பன்தோப்பு வாசுகி, இராமச்சந்திரன் பழத்தோட்டத்தில் அமைந்துள்ள அரசு, வேம்பு மரம் திருக்கல்யாண விழா நேற்று (டிசம்பர் 10) சிறப்புடன் நடைபெற்றது.

Update: 2021-12-11 03:45 GMT

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி பன்தோப்பு வாசுகி, இராமச்சந்திரன் பழத்தோட்டத்தில் அமைந்துள்ள அரசு, வேம்பு மரம் திருக்கல்யாண விழா நேற்று (டிசம்பர் 10) சிறப்புடன் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தில் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்ற விழா நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து மங்கள இசையுடன் சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். 

இதனிடையே அரசு, வேம்பு மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் தேய்க்கப்பட்டு, பூ மாலை அணிவிக்கப்பட்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த திருமணத்தை நடத்தி வைப்பதால் அனைவருக்கும் எல்லா செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்று பக்தர்கள் தெரிவித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Source, Image Courtesy: Kathirnews

Tags:    

Similar News