பிபின் ராவத் மறைவு நமது நாட்டிற்கு பேரிழப்பு: மதுரை ஆதீனம் இரங்கல்!

பிபின் ராவத் இறப்பு நமது நாட்டிற்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடிக்கும், ராணுவத்தினருக்கும் இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-12-11 06:16 GMT

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது காட்டேரி என்ற இடத்தில் நடைபெற்ற விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள், கமாண்டோக்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் விமானி மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த துயரச் சம்பவம் இந்திய நாட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிபின் ராவத் இறப்பு நமது நாட்டிற்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடிக்கும், ராணுவத்தினருக்கும் இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy:Vikatan


Tags:    

Similar News