ராமநாதபுரத்தில் ராஜராஜ சோழன் காலத்து ஈழக்காசுகள் கண்டெடுப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜ ராஜ சோழன் காலத்து ஈழக்காசுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜ ராஜ சோழன் காலத்து ஈழக்காசுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புல்லாணி அரசு மேல் நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் இருக்கிறது. இங்கு மாணவர்களுக்கு கல்வெட்டுகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் திருப்புல்லாணி மாணவி கு.முனீஸ்வரி முதலாம் ராஜராஜ சோழன் பெயற் பொறித்த 3 ஈழக்காசுகளை கோரைக்குட்டம் என்ற இடத்தில் கண்டெடுத்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே முதலாம் ராஜராஜ சோழன் காலத்து ஈழக்காசுகள் கண்டுபிடிப்பு. சோழர்கள் இலங்கையை ஆட்சி செய்தபோது அச்சடிக்கப்பட்ட காசுகள் இவை pic.twitter.com/xyT5KHHZJf
— 𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) December 14, 2021
இந்த காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் அமைந்துள்ளது. அதன் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. காசுகளின் வலது பக்கத்தில் திரிசூலம் விளக்கு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மறுபக்கத்தில் சங்கு ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் அமைப்பு உள்ளது. அதில் ஸ்ரீராஜராஜ என மூன்று வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காசுகளில் உள்ளவரும் இலங்கை காசுகளில் உள்ள உருவம் போன்று பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source:
Image Courtesy: தினகரன்