கீழக்கரையில் சேதமடைந்த சித்தி விநாயகர் கோயில்: கண்டும் காணாமல் போகும் இந்து சமய அறநிலையத்துறை!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்புறத்தில் வள்ளல் சீதக்காதி சாலையில் பழமையான நினைத்ததை நிறைவேற்றுகின்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

Update: 2021-12-18 14:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்புறத்தில் வள்ளல் சீதக்காதி சாலையில் பழமையான நினைத்ததை நிறைவேற்றுகின்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இதனிடையே, சித்தி விநாயகர் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலின் முகப்பு பகுதி கடந்த 1948ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டுமானம் எனக் கூறப்படுகிறது. அதன் அருகாமையில் உள்ள அர்த்த மண்டபம், வெளிப் பிரகார மண்டபம் சேதமடைந்த நிலையில், கூரை பூச்சும் மிகவும் சிதிலமடைந்து உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது.

இது பற்றி கீழக்கரை பக்தர்கள் கூறும்போது: மிகவும் பழமை வாய்ந்த நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழும் நிலை நீடிக்கிறது. இதனால் கோயிலுக்கு உள்ளே சென்று சாமி கும்பிடுவதற்கு மிகவும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அது மட்டுமின்றி சமீபத்தில் பெய்த கனமழையால் கட்டடம் மிகவும் மோசமாக பழுடைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில் உள்ளது. ஆனால் இதுவரை பராமரிப்பு செய்ததே கிடையாது. இப்படியே நீடித்தால் கட்டடம் இடிந்து விழும் நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கையே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News