தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஷ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் பரவசம்!
தருமபுரி நகரத்தில் அமைந்துள்ளது கோட்டை மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில். இதில் மூலவர் மல்லிகார்ஜூனேசுவரர், அம்மன் தாயார் காமாட்சி ஆகும். இக்கோயிலுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோயில் சிறப்பு பற்றி பார்ப்போம், ஆடிமாதம், ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் நடைபெறும். இத்திருத்தலத்தின் மிக சிறப்பான விழாவாகும். அது தவிர வெள்ளி சிறப்பு சந்தன காப்பு, பூப்பந்தல், சேவை ஆகியவை சிறப்பானதாக இருக்கும். மேலும், தை மாதம், சண்டி ஹோமம் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதிலும் தற்போது மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற சிறப்பு பூஜை மற்றும் விழாக்கள் கூடுதல் சிறப்பை பெறும். அந்த வகையில் இன்று தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஷ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Source, Image Courtesy: Kathirnews