கடலூர்: அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம்! மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்கள்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்கள் திடீரென்று வாந்தி, மற்றும் மயக்கள் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வையங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 188 மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு வழக்கம் போன்று வழங்கப்படும் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதனை வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். அதன் பின்னர் மயக்கம் ஏற்பட்டு பள்ளி வளாகங்களிலேயே பிரதீஷ், கார்த்திகா, நவீன்குமார், பாலமுருகன், பால்ராஜ் உள்ளிட்டோர் விழுந்துள்ளனர். இதனால் மயக்கம் அடைந்த மாணவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களை காண்பதற்காக மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்து வரும் சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Polimer