தேனி: இந்துக்கள் வசிக்கின்ற பகுதியில் புதிய மசூதியை திறந்த இஸ்லாமியர்கள்! இந்து முன்னணி சீல் வைப்பு!
தேனி மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற கிராமத்தில் மதம் மாற்றம் செய்து புதிய மசூதி ஒன்றை இஸ்லாமியர்கள் திறந்து வைத்ததை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற கிராமத்தில் மதம் மாற்றம் செய்து புதிய மசூதி ஒன்றை இஸ்லாமியர்கள் திறந்து வைத்ததை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில், இந்துக்களை மட்டும் குறிவைத்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு பல்வேறு வகையில் தடை விதித்தாலும், மதமாற்றும் கும்பல்கள் எப்படியாவது இந்துக்களை குறிவைத்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மதமாற்றுவதற்கு புதிய தடை சட்டங்களை இயற்றி வந்துள்ளனர். இதனால் அது போன்ற மாநிலங்களில் மதமாற்றும் வேலைகள் தடைப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் மதமாற்றும் முறைக்கு இன்னும் சட்டங்கள் இயற்றவில்லை. இதனால் மதமாற்றும் கும்பல்கள் இந்துக்களை குறிவைத்து, குறிப்பாக கிராமப்பகுதிகளில் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றி வருகிறது. ஏழை இந்துக்களுக்கு தேவையான பணம் மற்றும் பொருள்களை கொடுத்து மதமாற்றும் முயற்சிகள் நடைபெறுகிறது. இதனை இந்து அமைப்புகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வருகிறது. இருந்தபோதிலும் ஏதேனும் ரூபத்தில் மதமாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டம் டொம்புச்சேரி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அங்கு இஸ்லாமியர்கள் சிலர், இந்துக்களை மதமாற்றம் செய்து அவர்களுக்காக புதிய மசூதி ஒன்றை தகரத்தால் வடிவமைத்து கொடுத்துள்ளனர். இது பற்றி கேள்விப்பட்ட இந்து அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது. புகாரை தொடர்ந்து டொம்புச்சேரி கிராமத்தில் இருந்த மசூதிக்கு தாசில்தார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இது போன்று இந்துக்கள் ஆங்காங்கே முன்னின்று செயல்பட்டால் மட்டுமே மதம் மாற்றும் கும்பல்களை விரட்டியடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Facebook