வேகமாக பரவும் ஒமைக்ரான்: சென்னை மாநகராட்சி, பள்ளி கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது!
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தற்போது சென்னையில் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தற்போது சென்னையில் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கல்லூரிகளில் படிக்கின்ற அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா அல்லது முகக்கவசம் அணிகிறார்களா என்பதனை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், அதிகமான மாணவர்கள் ஒன்றாக சேரும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். விடுதிகளில் உணவு சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தட்டுகளை உபயோகிக்க வேண்டும். அதாவது ஒரே தட்டை பலர் உபயோகிக்கும்போது தொற்று விரைவில் பரவி விடும் அபாயம் உள்ளது. குறிப்பாக குளிர்சாதனத்தை பயன்படுத்தாமல் மின்விசிறியை பயன்படுத்தலாம். மேலும், கல்லூரி மற்றும் பள்ளிகளில் சரியான இடைவெளியின்போது சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் தேவைப்படும் பட்சத்தில் மாநகராட்சியை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Source: Puthiyathalimurai
Image Courtesy: The New Indian Express