தடை செய்யப்பட்ட ஏமனுக்கு சென்று வந்த மதுரை இளைஞர் கைது!

மத்திய அரசு ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய தடை விதித்திருந்த நிலையில், மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்நாட்டிற்கு சென்று மதுரை திரும்பிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-26 09:00 GMT

மத்திய அரசு ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய தடை விதித்திருந்த நிலையில், மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்நாட்டிற்கு சென்று மதுரை திரும்பிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் உள்ளது. அதில் உதயகுமார் என்ற பட்டதாரி இளைஞர் கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் இருந்து துபாய்க்கு சென்று துபாயிலிருந்து மீண்டும் ஜோர்டான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து மீண்டும் டூரிஸ்ட் விசா பெற்று ஜோர்டான் நாட்டில் இருந்து ஏமன் நாட்டிற்கு சென்று வேலை பார்த்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு விதிமுறைகளின்படி அரசு நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் செல்லக்கூடாது என்ற தடை அமலில் உள்ளது. ஆனால் அதனை மீறி மதுரையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஏமன் நாட்டிற்கு எதற்காக சென்று வந்தார் என்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்ற விவரங்களையும் துருவி, துருவி விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.

Source: Polimer

Image Courtesy: iStock

Tags:    

Similar News