சென்னைக்கு கடத்தப்பட்ட ஆறரை டன் குட்கா பறிமுதல்!

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் குட்கா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.;

Update: 2021-12-27 03:28 GMT
சென்னைக்கு கடத்தப்பட்ட ஆறரை டன் குட்கா பறிமுதல்!

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் குட்கா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு மினி கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை சோதனை செய்ததில் 300 மூட்டைகளில் 60 லட்சம் ரூபாய் திப்பிலான சுமார் ஆறரை டன் குட்கா, மற்றும் பான் மசாலா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து லாரி டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கண்டெய்னர் லாரிரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Source: Polimer

Image Courtesy: Indiamart

Tags:    

Similar News