லண்டனில் இருந்து கோவைக்கு வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி!
லண்டலில் இருந்து கோவைக்கு விமான மூலம் வந்த பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.
லண்டலில் இருந்து கோவைக்கு விமான மூலம் வந்த பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் கோவையை கடந்த ஆண்டு ஆட்டிப்படைத்தது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் பலர் அவதிப்பெற்றுள்ளனர். இதனிடையே தற்போது ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் கோவையில் நுழைந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது 69 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் லண்டனில் இருந்து கோவைக்கு விமான மூலம் வந்துள்ளார். அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவு நேற்று (டிசம்பர் 31) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy:The Hindu