பொலிவிழந்து காணப்படும் பழங்கால கோயில்! கும்பாபிஷேகம் எப்பொழுது ?
உடுமலைபேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடுமலைபேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ளது கொங்கலக்குறிச்சி, இந்த ஊரில் மிகவும் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பல நூற்றாண்டுக்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலுக்கு இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் கோயில் பொலிவிழந்து காணப்படுகிறது. கோயில் கட்டுமானங்களும் தரத்தை இழந்து வருகிறது. கற்களால் அடுக்கப்பட்ட கட்டுமானங்கள் கீழிறங்கி வருகிறது. தற்போதைய நிலையில் சுண்ணாம்பு பூச்சால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சுவர் கூட இல்லாமல் வெறும் கற்கள் மட்டுமே அடுக்கிவைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிலைகளும் சிதிலமடைந்து வருவதால் உடனடியாக கோயிலை அறநிலையத்துறை பராமரித்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar