கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கல் வெட்டியெடுப்பு!

Update: 2022-01-10 03:07 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள உத்தனப்பள்ளி அருகே நீலகிரியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக நாகமங்கலத்தில் 2 ஏக்கர் மானில நிலம் உள்ளது. அங்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் சண்முகம். இவர் தனியார் கிரானைட் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் கடந்த 17 ஆண்டுகளாக கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து வந்துள்ளார். தற்போது ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி அளித்த புகாரால் பல தனி நபர்கள் சிக்குகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக ஓசூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல குவாரிகள் உள்ளது. அதனை அரசு முறையாக பயன்படுத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அறநிலையத்துறைக்கு வந்து சேரும். அதன் மூலம் கோயில்களை புதுப்பிக்கலாம், பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Source: Dinamalar

Image Courtesy:The Hindu

Tags:    

Similar News