காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோயில் மண்டபத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மண்டபத்தை மீட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சாலையில் பணாமுடீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ஆக்கிரமித்து அதனை இரும்பு தகடுகளால் சுற்றுச்சுவர் எழுப்பி அதனை கடையாக நடத்துவதற்கான பணிகளை செய்து வந்தனர். கோயிலை பாதுகாக்க வேண்டி அதிகாரிகள் மண்டபத்தை தாரை வார்த்து கொடுத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனை உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு மண்டபத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நாளிதழ்களில் செய்தியாக வந்ததை தொடர்ந்து கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை மீட்டனர். அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
Source: Dinamalar
Image Courtesy:Makemy Trip