கோடிக்கணக்கான சொத்து இருந்தும் இடிந்து விழும் நிலையில் மசராயர் பெருமாள் கோயில்!

Update: 2022-01-27 08:01 GMT

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மசராய பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தும் கோயில் பூஜை செய்வதற்கு கூட யாரும் இல்லாமல் பாழடைந்த நிலையில் இருப்பது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த மசராய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் ஓடுகளால் மேயப்பட்டது ஆகும். இங்கு மசராயப்பெருமாள் மரச்சிலை வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி மிகவும் கோலாகலமாக விழா நடத்துவது வழக்கம். அப்போது மசராய பெருமாள் சுவாமி வெள்ளை நிறக்குதிரையில் பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.

கடந்த 60 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே மசராய பெருமாள் கோயிலின் பூஜையான நோன்பு சாத்தப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 3.35 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் இவ்வளவு சொத்துகள் இருந்தும் கோயிலை கண்டும், காணாமல் விட்டுள்ளது அறநிலையத்துறை. இதனால் இந்த கோயிலுக்கு வருபவர்கள் வேதனையுடன் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். உடனடியாக இந்து அறநிலையத்துறை கவனத்தில் கொண்டு கோயிலை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News