தேனி: தேவசபை என்ற பெயரில் அனுமதி இல்லாமல் ஜெபவீடு!

Update: 2022-02-17 13:59 GMT

தேனி மாவட்டத்தில் தேவசபை என்ற பெயரில் அனுமதி இல்லாமல் ஜெபவீடு திறந்ததால், இந்து முன்னணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் ஜெபவீடு மற்றும்  ஜெபக் கூடங்கள் திறக்கப்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் ஜெபக்கூடம் திறக்கப்படுவதாக  பல இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில்,

தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை என்னும் கிராமத்தில், இந்தியன் பெந்தகோஸ்தே தேவசபை என்ற பெயரில் ஜெப வீடு ஒன்று அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக இது குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பு அளித்த புகாரின் பேரில், காவல் அதிகாரிகள் மனுவின் அடிப்படையில் ஜெபவீடு திறப்பதை  தடுத்து நிறுத்தினர்.

Similar News