சங்கர மடம் முற்றுகை, பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த 'தடா ரஹீம்' அதிரடி கைது!
காஞ்சியில் உள்ள சங்கர மட முற்றுகை மற்றும் பூணூல் அறுக்கும் போராட்டத்தை அறிவித்த தடா ரஹீம் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தடா ரஹீம் என்பவர் இந்துக்களுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக இந்து முன்னணி அமைப்பு காவல்துறையில் புகார் அளித்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.
சங்கர மட முற்றுகை மற்றும் பூணூல் அறுக்கும் போராட்டம்.
— Hindu Munnani (@hindumunnaniorg) February 25, 2022
போராட்டம் அறிவித்த தடா ரஹீம் இந்துமுன்னணி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.#இந்துமுன்னணி #பூணூல் pic.twitter.com/LasDPrmIK0
காஞ்சி சங்கர மட முற்றுகை மற்றும் பூணூல் அறுக்கும் போராட்டம் என்று சொல்லிக்கொண்டிருந்த தடா ரஹீமை அதிரடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது கைது நடவடிக்கைக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
Source: Twiter
Image Courtesy: Vikatan