திருவள்ளூர்: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஜெபக்கூடங்களை இடிக்க இந்து முன்னணி புகார்!
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோதமான ஜெபக்கூடங்களை உடனடியாக அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பல்வேறு இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு ஜெபக்கூடம் நடத்தப்பட்டு வருவதை அரசு இடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இந்துக்கள் முன்வைத்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சட்ட விரோத ஜெபகூடங்களை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்துமுன்னணி புகார்மனு.#இந்துமுன்னணி #திருவள்ளூர் #சட்டவிரோத_ஜெபகூடம் pic.twitter.com/q4yhzFJ7jG
— Hindu Munnani (@hindumunnaniorg) March 15, 2022
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சட்டவிரோத ஜெபக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter