நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தி.மு.க. நிர்வாகி எதிர்ப்பு: 'போராட்டத்தை சந்திக்க நேரிடும்" என விவசாயிகள் எச்சரிக்கை!

Update: 2022-03-16 04:45 GMT

கடையத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு நெல் கொள்முதல் செயல்பட்டு வருகிறது. இதனை வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் பழைய இடத்திலேயே செயல்படும் என்று ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடையத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எங்களுக்கு சாதகமான இடத்தில்தான் நெல் கொள்முதல் நிலையம் இருக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரவுடிகளை வைத்து அரசு அதிகாரிகளையும் மிரட்டியுள்ளதாக கடையம் ஊராட்சி மன்றத் தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.

Source, Image Courtesy: News j

Tags:    

Similar News